டெல்லி கற்று மாசுபாடு.. போராட்டத்தில் குதித்த மக்களை.. கைது செய்த போலீஸ்!!
டெல்லி: டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளதை கண்டித்தும் மக்கள் தூய்மையான காற்றை சுவாசிப்பதை உறுதி செய்ய கோரியும் போராட்டம் நடத்தியவர்கள் குண்டு கட்டாக கைது செய்யப்பட்டார்கள். காற்று மாசு அதிகமுள்ள டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்றின் தரக்குறியீடு 370 புள்ளிகள் என்ற மிகவும் மோசமான நிலையை எட்டி வருகிறது. இந்த சூழலில் ஒன்றிய மாநில அரசுகளை கண்டித்து டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் பொதுமக்கள் ஒன்றி கூடினர். குளிர்காலத்தில் சுவாசிப்பதற்கு கூட முடியாத நிலை ஏற்பட்டு உள்ளதாக குற்றம் சாட்டிய அவர்கள் எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி முழக்கமிட்டனர்.
காற்று மாசுக்கு பஞ்சாப் விவசாயிகள் மீது பழிபோடும் மாநில அரசு காற்று மாசை தடுக்க நிதி ஒதுக்காதது என் என்று கேள்வி எழுப்பினர். அப்போது அனுமதியின்றி போராட்டம் நடத்துவதாக கூறி பொதுமக்களை போலீசார் கைது செய்து பேருந்துகளில் ஏற்றினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. போராட்டம் நடத்தியவர்களை கைது செய்த டெல்லி அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தூய்மையான காற்றில் மனிதனின் அடிப்படை உரிமை என்று குறிப்பிட்டுள்ளார். எக்ஸ் தலத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி தூய்மையான காற்றை கேட்கும் பொதுமக்களை குற்றவாளிகளை போன்று நடத்துவதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கிடையே இந்தியா கேட் பகுதியில் மற்றொரு இடத்தில் தெருநாய்கள் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து விலங்குகள் நல ஆர்வலர்கள் போராட்டம் நடத்தினர். பள்ளிகள், மருத்துவமனைகள், ரயில் நிலையங்கள், அரசு கட்டிடங்களில் திரியும் தெருநாய்களை பிடித்து காப்பகங்களில் அடைக்க ஆண்மையில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்திய போராட்டக்காரர்கள் அந்த நாய்கள் எங்கு செல்லும் என்று வாதிட்டனர்.