தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு :100க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிப்பு!!

டெல்லி : டெல்லி சர்வதேச விமான நிலையத்தின் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு மையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 100க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.நாட்டின் தலைநகர் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் நாளொன்றுக்கு 1,500-க்கும் மேற்பட்ட விமானங்களின் வருகைகள் மற்றும் புறப்பாடுகளை கையாண்டு வருகிறது. இந்த நிலையில், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு மையத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக டெல்லி விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.இதனால் விமான புறப்பாடு மற்றும் வருகை இரண்டும் பாதிக்கப்பட்டன.

Advertisement

விமானத் திட்டங்களை வழங்கும் ஆட்டோ டிராக் சிஸ்டத்திற்கான (AMS) தகவல்களை வழங்கும் தானியங்கி செய்தி மாறுதல் அமைப்பில் (AMSS), சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில்,"விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு (ஏடிசி - ATC) அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.இதை விரைவில் தீர்க்க விமான நிலைய நிர்வாகம் உட்பட அனைத்து தரப்பினரும் தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. விமானப் பயணிகள் அந்தந்த விமான நிறுவனங்களுடன் தொடர்பில் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். பயணிகளுக்கு ஏற்பட்டிருக்கும் சிரமத்திற்கு வருந்துகிறோம்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement