தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டெல்லியில் அஜீரணத்திற்காக பயன்படுத்தப்படும் ENO-வை போலியாக தயாரித்து விற்பனை: 2 இளைஞர்கள் கைது

 

Advertisement

டெல்லி: போலி Colgate டூத் பேஸ்டை தொடர்ந்து, டெல்லியில் அஜீரணத்திற்காக பயன்படுத்தப்படும் ENO-வை போலியாக தயாரித்து விற்பனை செய்த சந்தீப், சோட்டு என்ற இரு இளைஞர்களை கைது செய்தனர். இந்தச் சோதனையில், ஈனோவின் பெயரில் போலியாக தயாரிக்கப்பட்ட 91,000-க்கும் மேற்பட்ட பாக்கெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த போலி ENO அட்டை பார்ப்பதற்கு நிறம் மங்கியதாகவும், சுவையில் சிறிய மாற்றத்துடனும் இருக்கும் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். பொருளின் உண்மைதன்மையை ENO இணையதளத்தின் மூலம் சரிபார்த்து கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.

டெல்லியில் போலி ஈனோ தயாரிக்கும் தொழிற்சாலையை டெல்லி காவல்துறை குற்றப்பிரிவு கண்டுபிடித்துள்ளது. இந்த சோதனையில் 91,000-க்கும் மேற்பட்ட போலி ஈனோ பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சந்தீப் ஜெயின் மற்றும் ஜிதேந்தர் என்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டெல்லியின் இப்ராஹிம்பூர் பகுதியில் போலி அமிலநீக்கி (antacid) தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருவதாக டெல்லி காவல்துறை குற்றப்பிரிவுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அங்கு அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில், ஈனோவின் பெயரில் போலியாகத் தயாரிக்கப்பட்ட 91,000-க்கும் மேற்பட்ட பாக்கெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும், உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்கள், நிறுவன முத்திரையுடன் கூடிய ரோல்கள், ஸ்டிக்கர்கள், மற்றும் இயந்திரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு தயாரிக்கப்படும் போலியான தயாரிப்புகளை உட்கொள்வதால் வயிற்றில் எரிச்சல், அமிலத்தன்மை அதிகரிப்பு, ஒவ்வாமை ஆகியவை ஏற்படக்கூடும். இதுபோன்ற போலி தயாரிப்புகள் எந்தவித தரப் பரிசோதனையும் இல்லாமல் தயாரிக்கப்படுவதால், அவற்றுக்கு மருத்துவ அங்கீகாரம் இருக்காது. எனவே பொதுமக்கள் பொருட்களை வாங்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

 

Advertisement

Related News