டெல்லி கலவர வழக்கில் ஜாமின் மனுக்கள் மீது பதிலளிக்க போலீசாருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
டெல்லி :உமர் காலித், ஷர்ஜீல் இமாம் உள்ளிடோரின் ஜாமின் மனுக்கள் மீது பதிலளிக்க டெல்லி போலீசாருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. டெல்லி கலவர வழக்கில் கடந்த 5 ஆண்டுகளாக ஜாமின் இன்றி சிறையில் உள்ள உமர் காலித், ஷர்ஜீல் இமாம் உள்ளிட்டோரின் ஜாமின் மனு மீது பதிலளிக்க மேலும் 2 வாரம் அவகாசம் கேட்ட டெல்லி போலீசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. “5 ஆண்டுகள் ஏற்கனவே முடிந்துவிட்டன. போதுமான நேரமும் கொடுத்துவிட்டோம். வரும் 31ம் தேதி பதிலளிக்க வேண்டும்" என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
Advertisement
Advertisement