டெல்லியில் கார் குண்டுவெடிப்பு எதிரொலி ரயில்வே ஜங்ஷனில் தீவிர சோதனை
*வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி
திருச்சி : டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டு வெடு ப்பு எதிரொலியாக திரு ச்சி ரயில்வே ஜங்ஷனில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.
டெல்லி செங்கோ ட்டை மெட்ரோ நிலையத்தின் கேட் எண் 01 அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் தீவிரவாதிகள் வைத்த அதிதீவிரம் கொண்ட குண்டுவெடித்து 8 பேர் பலியாகினர். இதையடுத்து நாடுமுழுவதும் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் நேற்று இரவு திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை, வெடிகுண்டு தடுப்பு பிரிவு மற்றும் ரயில்வே போலீஸ் சார்பில் திருச்சி ரயில் நிலையத்தில் தீவிர நாசவேலை தடுப்பு சோதனை நடத்தப்பட்டது.தெற்கு ரயில்வே முத ன்மை தலைமை பாதுகாப்பு ஆணையர் அருள் ஜோதி, உத்தரவின் பேரில், திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை முதுநிலை கோட்ட ஆணையர் பிரசாந்தி யாதவ் மற்றும் உதவி ஆணையர் பிரமோத் நாயர் ஆகியோர் மேற்பார்வையில், திருச்சி ஆர்பிஎப் இன்ஸ்பெக்டர் அஜய் குமார், திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை, வெடிகுண்டு தடுப்பு பிரிவு சரவணன், உதவி ஆய்வாளர் மற்றும் ரயில்வே போலீஸ் டிஎஸ்பி சக்கரவர்த்தி மற்றும் இன்ஸ்பெக்டர் ஷீலா தலைமையில் நேற்று திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை, சப் இன்ஸ்பெக்டர் சிவராஜா, வெடிகுண்டு தடுப்பு பிரிவு தண்டபாணி, முருகேசன், திருமலை இணைந்து திருச்சி ரயில் நிலையத்தில் தீவிர நாசவேலை தடுப்பு சோதனை நடத்தப்பட்டது.
சோதனையின் போது, ரயில்வே வளாகத்திலும் ரயிலிலும் சந்தேகத்திற்கிடமான, குற்றஞ்சாட்டக்கூடிய, வெடிக்கும் பொருட்கள் மற்றும் எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்கள் எதுவும் இருக்கிறதா? என தீவிர சோதனை நடத்தினர்.
மேலும், ரயில் பெட்டிகளில் ஏறி பயணிகளின் உடமைகள் மற்றும் பார்சல் கொண்டுசெல்லப்படும் இடங்களில் மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் தீவிர சோதனை நடத்தினர். ஆனால் சந்தேகப்படும்படி எந்தவித வெடிபொருட்களும் சிக்கவில்லை என பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.