தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாதுகாப்பு துறையில் ஒத்துழைப்பு: இந்தியா-அமெரிக்கா இடையே ஒப்பந்தம் கையெழுத்து

புதுடெல்லி: மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் ஆசியான் அமைப்பின் பாதுகாப்பு துறை அமைச்சர்களின் உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்வில், இந்தியா, அமெரிக்கா,ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்தநிலையில் ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத்தை நேற்று சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இந்தியா - அமெரிக்கா பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

Advertisement

இந்த ஒப்பந்தம், இரு நாடுகளின் பாதுகாப்பு உறவை அடுத்த 10 ஆண்டுகளுக்கு வலுப்படுத்தி, தொழில்நுட்பப் பரிமாற்றம், தகவல் பகிர்வு மற்றும் கூட்டு பயிற்சிகளை உள்ளடக்கியது.இந்த ஒப்பந்தம், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதையடுத்து இந்தியா மீது 50 % வரிகளை அமெரிக்க அதிபர் அறிவித்தார்.

இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவு பாதிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில்,இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதுகுறித்து ராஜ்நாத் சிங் எக்ஸ் தளத்தில் பதிவிடுகையில், இந்தியா-அமெரிக்கா பாதுகாப்பு உறவு இதுவரை இல்லாத அளவு வலுவடைந்துள்ளது. இந்த 10 ஆண்டு ஒப்பந்தம், நமது கூட்டு உறவின் புதிய யுகத்தைத் தொடங்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement