வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது: இந்திய வானிலை மையம்
Advertisement
சென்னை: வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. தென்கிழக்கு, மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய கூடும். நாளை மறுநாள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும். வங்கக் கடலில் அக்.27ம் தேதி புயல் உருவாகிறது. 27 ஆம் தேதி தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறும் என்று கூறியுள்ளது.
Advertisement