பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா அறிவிப்பு
ஜெருசலேம்: பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிப்பதாக இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அறிவித்துள்ளனர், இந்த முடிவில் பாலஸ்தீன வரவேற்றுள்ளது. பாலஸ்தீனம் மேற்கு கரை, காசா முனை என இரண்டு பகுதிகளாக உள்ளது. இதில் காசா முனை ஹமாஸ் குழுவினரும், மேற்கு கரையை முகமது அப்பாஸ் தலைமையிலான பாலஸ்தீன அரசும் நிர்வகித்து வருகின்றன. கடந்த 2023-ம் ஆண்டில் ஹமாஸ் குழுவினர் இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இதைத்தொடர்ந்து காசை முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் 2ஆண்டாக தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்தப் போரில் 65 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். பாலஸ்தீனத்தை தனிநாடாக 140-க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கீகரித்துள்ளன. அமெரிக்கா உள்ளிட்ட சில மேற்கத்திய நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கவில்லை. இந்த நிலையில், பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அறிவித்துள்ளனர். தங்களை தனி நாடாக அங்கீகரித்ததற்காக இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா நாடுகளுக்கு பாலஸ்தீன அரசு நன்றி தெரிவித்துள்ளது.