தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தென்காசியில் தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 8ஆக உயர்வு!

 

Advertisement

தென்காசி: தென்காசி அருகே 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது. தென்காசி மாவட்டம் இடைக்கால் அருகே உள்ள துரைசாமிபுரம் கிராமத்தில் இருந்து வந்த தனியார் பேருந்தும், தென்காசியிலிருந்து ராஜபாளையம் சென்று கொண்டிருந்த போது கோவில்பட்டியிலிருந்து தென்காசி நோக்கி வந்த மற்றொரு தனியார் பேருந்தும் இடைக்கால் அருகே உள்ள துரைசாமியாபுரத்தில் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்தனர். இதில், 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு முதலுதவிக்காக அனுப்பி வைத்தனர். தற்போது அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், பேருந்தில் பயணம் செய்த 6 பேர் பலியான நிலையில் அவர்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள், எங்கிருந்து வந்தார்கள் என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இத்தகைய விபத்து தென்காசி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், தென்காசியில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்தை ஏற்படுத்திய கேஎஸ்ஆர் என்ற தனியார் பேருந்தின் உரிமத்தை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பலியான 6 பேரில் மூவரின் உடல் அடையாளம் காணப்பட்டது. 1.வனராஜ் (36) புளியங்குடி, 2. தேன்மொழி (55) கடையநல்லூர், 3. மல்லிகா (55) புளியங்குடி ஆகியோர் உடல்கள் அடையாளம் காணப்பட்டது. இந்நிலையில், தென்காசி அருகே 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது. பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பெண்கள், ஒரு ஆண் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

Advertisement