ஹத்ராஸில் சத்சங் நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 122ஆக உயர்வு!
06:27 PM Jul 02, 2024 IST
Share
உத்தரப் பிரதேசம்: ஹத்ராஸில் சத்சங் நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 122ஆக உயர்ந்துள்ளது. ரதிபன்பூர் என்ற கிராமத்தில் நடந்த ஆன்மிக நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் பலி. சாமியார் சொற்பொழிவு முடிந்து ஒட்டுமொத்தமாக மக்கள் வெளியேறிய போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு ஒருவர் மீது ஒருவர் விழுந்து மரணம். கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்ட 150 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சாமியார் ஒருவர் நடத்திய சத்சங் நிகழ்ச்சியில் 15ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.