வாகனம் மோதி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதி: முதல்வர் உத்தரவு
Advertisement
உயிரிழந்த மாரிக்கண்ணுவின் உடல் உறுப்புகள் அவரது குடும்பத்தினரின் சம்மதத்துடன் தானமாக வழங்கப்பட்டு அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. மாரிக்கண்ணு குடும்பத்தினரின் தியாக உணர்வை தமிழ்நாடு அரசு போற்றுகிறது. இவ்விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதுடன், அவரது குடும்பத்தினருக்கு 3 லட்சம் ரூபாய் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
Advertisement