தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முட்டுச்சந்து முட்டுப்பகுதிக்கே ஆட்கள் பிடிக்க முடியாமல் திணறும் இலைக்கட்சி மாஜிக்கள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘கிடைக்க வேண்டியது கிடைக்கிறதால கனிம கொள்ளையை கண்டும் காணாமல் இருக்கிறாங்களாமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.

Advertisement

‘‘கிரிவலம் மாவட்டத்துல ஆற்றோட பெயரை கொண்ட ஊரான செய் ஆறு இருக்குது.. இந்த ஏரியாவுல, 3 வாரத்துக்கு முன்னாடி முருகத்தான் பூண்டி கிராமத்துல ஆற்று மணலை பதுக்கி வெச்சிருக்குறதாக, தனிப்பிரிவு காக்கிகளுக்கு தகவல் கிடைச்சுதாம்.. அப்புறம் காக்கிகள் மூலம் மணல் பறிமுதல் செய்து, பொதுப்பணித்துறை மூலமாக பில் போட்டு கொடுத்து ஏலம் விட்டாங்களாம்.. ஏலம் விட்டு 2 வாரம் ஆகுதாம்.. ஆனாலும் அந்த பழைய ஏலச்சீட்டை வெச்சிக்கிட்டு, மாட்டு வண்டிகள் மூலம் மணலை சேகரிச்சு லாரிகள்ல கடத்துறாங்களாம்.. இது அந்த பகுதியில் இரவு ரோந்து பணிக்கு போகிற சில காக்கிகளுக்கும், ரெவின்யூ ஆபிசர்களுக்கும் தெரியுமாம்.. அவங்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைக்குறதால கண்டும்காணாமல் இருந்துவிடுறாங்களாம்.. இதேபோல, செய் ஆறு பகுதிகள்ல மணல் பதுக்கல் அதிகளவு இருக்குறதா புகார் குரல்கள் ஒலிக்குது..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘வாலிபரை கொன்று விவசாய கிணற்றில் வீசிவிட்டு சென்ற விவகாரத்தில் பிரபல ரவுடிக்கு மட்டும் 25 லகரம் கைமாறி இருக்காமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘சமீபத்துல நெல்லையை சேர்ந்த வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு சடலத்தை காரில் கடத்தி வந்து மான்செஸ்டர் மாவட்டம் செட்டிபாளையத்தில் இருக்கிற ஒரு விவசாய கிணற்றில் வீசிவிட்டு கொலையாளிகள் தப்பி ஓடிட்டாங்க.. இதுதொடர்பாக போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினாங்க.. ஆனா உண்மையான கொலையாளிகளுக்கு பதிலா பாளையங்கோட்டையை சேர்ந்த ரெண்டு பேர் போலீசில் சரணடைந்துட்டாங்க.. சரணடைந்த ஸ்டேஷனில் இன்ஸ் பணியிடம் காலியாக இருந்ததால் பக்கத்து ஸ்டேஷன் இன்ஸ் தான் பொறுப்பு அதிகாரியாம்.. சரணடைந்த ரெண்டு பேரும் உண்மையான கொலையாளிகள் இல்லைன்னு தெரிஞ்சிருந்தும் இன்ஸ் கண்டுக்காம விட்டுவிட்டாராம்.. இந்த தகவல் மாவட்ட எஸ்பி காதுக்கு எட்டினதும் இன்ஸ்க்கு தெரியாம தனிப்படை அமைத்து உண்மையான கொலையாளிகளை கைது செய்தார்களாம்.. இந்த கொலைக்காக மான்செஸ்டர் மாநகரில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து திட்டம் தீட்டினார்களாம்.. இந்த கொலையின் பின்னணியில் தென்மாவட்டத்தை சேர்ந்த பிரபல ரவுடி இருந்ததும், இதற்காக 25 லகரம் வரைக்கும் ரவுடிக்கு பணம் கைமாறி இருக்கிறதாகவும் தகவல் வெளியாகி இருக்கு.. அதேபோல இந்த கொலையில் சிறையில் இருக்கும் ஒரு ரவுடிக்கும் தொடர்பு இருக்கிறதா சொல்றாங்க.. எல்லா தகவலும் சம்பந்தப்பட்ட இன்ஸ்க்கு தெரிந்திருந்தும் கண்டுக்காம இருந்ததோடு போலியான கொலையாளிகள் சரணடைந்த விவகாரத்தில் இன்ஸ் செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்தினாங்களாம்.. விசாரணையில் கிடைச்ச தகவல்கள் மான்செஸ்டர் மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகளை அதிர்ச்சியடைய செய்திருக்காம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘முட்டுச்சந்து, முட்டுப்பகுதிக்கே ஆட்கள் பிடிக்க முடியாமல் இலைக்கட்சியின் மாஜிக்கள் திணறிக்கிட்டு இருக்காங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘தூங்கா நகருக்கு கடந்த முறை வந்தபோது, ஆட்கள் அதிகமின்றி வெளியூர்காரர்களே அதிகமிருந்ததை பார்த்து சேலத்துக்காரர் ரொம்பவே ஆத்திரப்பட்டாராம்.. இதற்காகவே இம்முறை பிரசார பயணத்திற்கு வருவதில் காலதாமதப்படுத்தி வந்தவரை, கட்சியினர் வற்புறுத்தி அழைத்தனராம்.. சேலத்துக்காரர் அனுப்பிய குழுவினரிடம் அதிகமதிகம் ஆட்களை கொண்டு வந்து சேர்ப்பதாக நிர்வாகிகள் தந்த உறுதியால்தான், செப்டம்பர் முதல் வாரத்தில் தூங்கா நகருக்கான வருகையை சேலத்துக்காரர் உறுதி செய்தாராம்.. அதுவும் அத்தனை மாவட்டங்களிலும் பிரசார பயணத்திற்கு இரு நாட்களே ஒதுக்கிய நிலையில், தூங்கா நகருக்கு நான்கு நாட்கள் பயணப்பட்டியல் தந்த சேலத்துக்காரர், ‘என்ன பண்ணுவீங்களோ, ஏது பண்ணுவீங்கேளா நான் பேசுகிற ஒவ்வொரு இடத்திலும் கூட்டம் நிரம்பி வழியணும்.. இல்லேன்னா பதவி பறிப்புதான்’னு உத்தரவு போட்டிருக்கிறாராம்.. ஆடிப்போன தூங்கா நகர இலைக்கட்சியின் மாஜிகள் உள்ளிட்ட நிர்வாகிகள் தினமொரு கூட்டம் போட்டு ஆள் சேர்ப்பதற்கான வழிமுறைகளை ஆராய்ந்தாங்களாம்.. பரிசுப்பொருட்களுடன், பணமும் தந்து ஆட்கள் பிடிக்கும் காரியம் ஒருபுறமிருந்தாலும், அதிகமதிகம் கூட்டம் காட்டும் வழிமுறை குறித்து ஆராயப்பட்டிருக்குது.. இதில் சந்துப் பகுதிகளை குறிவைத்து கூட்டம் போட்டால், ஆட்கள் அதிகமிருக்கும் தோற்றத்தைக் காட்டலாம் என்பதால் ஒத்தக்கடை, முனிச்சாலை சந்திப்புகள், குன்றம் கோயில் வாசல்.. என எப்போதும் ஆட்கள் நடமாட்டம் அதிகமிருக்கிற பகுதிகளுடன், முக்கு பகுதிகள், முட்டுச் சந்துகள் என கொஞ்சப் பேர் சேர்ந்தாலே பெரும் நெரிசல் தரும் இடங்களின் பட்டியலை இலைக்கட்சி நிர்வாகிகள் தயாரித்து தந்து, சேலத்துக்காரரை அங்கே பேசவிடலாம் என முடிவெடுத்து, காரியத்தில் இறங்கி இருக்கிறார்களாம்.. ஒரு பிரசார பயணத்துக்கே ஆட்களை சேர்க்க இந்த அவதிப்படுறாங்களே, எப்படித்தான் தேர்தல்ல ஓட்டு சேர்க்கப் போறாங்களோ என சக கட்சித்தொண்டர்களே அனைவரின் காதுபட புலம்பி தள்ளுறாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘புதிய நிர்வாகிகள் நியமன பிரச்னையை நான் பிரசார பயணத்திற்கு வரும் முன் சரி செய்ய பாருங்கன்னு சேலத்துக்காரர் உத்தரவிட்டுள்ளாராமே..’’ எனக் கேட்டார் மாமா.

‘‘ஹனிபீ மாவட்ட இலைக்கட்சி நிர்வாக ரீதியாக கிழக்கு, மேற்கு என இரண்டு மாவட்டங்களாக செயல்படுது.. மேற்கு மாவட்ட செயலாளராக பலாப்பழக்காரரின் முன்னாள் ஆதரவாளரான மாஜி எம்எல்ஏ இருக்கிறார். இவர் கட்சி நிர்வாகிகள் நியமனத்தில் பெருமளவு பணம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துருக்கு.. குறிப்பாக ஊர் என முடியும் நகரத்தின் பொறுப்பிற்கு, பழத்தின் பெயரை பின்பாதியில் கொண்டவரை நியமித்தார். இதற்காக ரூ.25 லகரம் வரை கைமாறியதாம்.. ஆனால், அவரது நடவடிக்கைகள் கட்சிக்குள் கடும் எதிர்ப்பை கிளப்பிய நிலையில், அவர் மீது அடுத்தடுத்த குற்றச்சாட்டுகளும் வரிசை கட்டி வந்துள்ளன. பெரியாறில் குழாய் பதித்து தண்ணீர் திருடியது, தன் வீட்டில் தானே பெட்ரோல் குண்டு வீசியது, வேறொரு பெண்ணுடன் உல்லாசமாக இருந்தபோது மனைவி வந்து விரட்டியது, வேலை வாங்கி தருவதாக மோசடி என குற்றச்சாட்டுகள் ரவுண்டு கட்டுகின்றன. இதனால், வேறு வழியின்றி அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டாராம்.. இதனால், நகர பொறுப்பிற்கு வர பலரும் கட்சித் தலைமையை அணுகியிருக்காங்க.. ஆனால், புதிய நிர்வாகிகள் நியமனத்தில் மாவட்ட செயலாளருக்கு அவ்வளவாக அக்கறை இல்லையாம்.. இந்த விவகாரம் சேலத்துக்காரரின் கவனத்திற்கு போக, அவரோ, மாவட்டத்திடம், ‘என்ன இப்படி போய்கொண்டிருந்தால், எப்படி கட்சி நடத்த முடியும்’ எனக் கேட்க, அவரோ நகர பொறுப்பிற்காக கொடுத்த ரூ.25 லகரத்தை திருப்பி கேட்டு பழைய ஆளு பஞ்சாயத்து செய்கிறார். அதை சரிகட்டிய பிறகே புதிய நிர்வாகிகளை நியமிக்க முடியும் என கூறியுள்ளார். இதைக் கேட்ட சேலத்துக்காரர், விரைவில் உங்கள் மாவட்டத்திற்கு பிரசார பயணம் வரவுள்ளேன். அதற்குள் பிரச்னையை சரி செய்வதற்கான வேலையை பாருங்கள் எனக்கூறியுள்ளாராம்.. இதனால், இலை தரப்பினர் கடுமையான அதிருப்தியில் இருக்காங்களாம்...’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

Advertisement

Related News