தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: ஸ்பெயினை வீழ்த்தி இத்தாலி சாம்பியன்

பொலோக்னா: டேவிஸ் கோப்பை ஆடவர் டென்னிஸ் போட்டியில் இத்தாலி அணி ஸ்பெயினை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டிகள் இத்தாலியின் பொலோக்னா நகரில் நடந்து வந்தன. நேற்று முன்தினம் நடந்த ஆடவர் இரட்டையர் பிரிவு போட்டியில் ஸ்பெயின் அணி, ஜெர்மனியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. அதையடுத்து, இறுதிப் போட்டியில் இத்தாலி - ஜெர்மனி அணிகள் மோதின. இத்தாலி அணியில் நட்சத்திர வீரர் ஜேனிக் சின்னர் இடம்பெறவில்லை. அதேபோல், ஸ்பெயின் அணியில் உலகின் முதல் நிலை வீரர் கார்லோஸ் அல்காரஸ் இடம்பெறவில்லை. இருப்பினும், இத்தாலியின் மேட்டியோ பெரெடினி, ஸ்பெயின் வீரர் கெரெனோ புஸ்டாவை, 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தினார்.

Advertisement

மற்றொரு இத்தாலி வீரர் பிளேவியோ கோபோலி, ஸ்பெயின் வீரர் ஜாமே முனாரை, 1-6, 7-6, 7-5 என்ற செட் கணக்கில் போராடி வென்றார். இதனால், இத்தாலி அணி, 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று சாம்பியன் பட்டத்தை தொடர்ந்து 3வது முறையாக கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. தவிர, கடந்த 1976ம் ஆண்டு நடந்த போட்டியிலும் இத்தாலி வென்றுள்ளது. ஒட்டு மொத்தத்தில் டேவிஸ் கோப்பையை அந்த அணி 4 முறை வென்றுள்ளது. முதல் முறையாக தற்போது, சொந்த மண்ணில் இத்தாலி வெற்றிக் கனியை பறித்து ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தி உள்ளது. டேவிஸ் கோப்பையை 6 முறை வென்றுள்ள ஸ்பெயின் அணி, 2019ம் ஆண்டுக்கு பின் முதல் முறையாக தற்போது இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Related News