தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மகள் ஸ்ரீகாந்திக்கு பாமக செயல் தலைவர் பதவி? அன்புமணி பதில் அளிக்க நாளையுடன் கெடு முடிகிறது: 31ம் தேதி ராமதாஸ் முக்கிய முடிவு

திண்டிவனம்: அன்புமணிக்கு விளக்கம் கேட்டு ஒழுங்கு நடவடிக்கை குழு அனுப்பிய நோட்டீசுக்கான கெடு நாளையுடன் முடிகிறது. எனவே செயல் தலைவர் பதவியிலிருந்து அவரை நீக்கிவிட்டு மகள் ஸ்ரீகாந்தியை நியமிக்க ராமதாஸ் திட்டமிட்டுள்ளதாகவும் இது தொடர்பாக வருகிற 31ம்தேதி முக்கிய முடிவை அவர் அறிவிக்கலாம் என்றும் பாமக வட்டாரத்தில் பரபரப்பு எழுந்துள்ளது.

Advertisement

பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே அதிகார மோதல் நீடித்து வருகிறது. இருவரும் பாமக போட்டி பொதுக்குழுவை நடத்தி முடித்த நிலையில், அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் தரப்பு 13 தீர்மானங்களை முன்மொழிந்தன. அதன்பிறகு விளக்கம் கேட்டு அன்புமணிக்கு ஒழுங்கு நடவடிக்கை குழு கடிதம் அனுப்பியது. இதற்கான காலக்கெடு நாளை (30ம்தேதி) முடிவடையும் நிலையில், இதுவரை அன்புமணி தரப்பில் எந்தவித விளக்கமும் அளிக்கப்படவில்லை.

இதனிடையே ராமதாசின் மூத்த மகள் ஸ்ரீகாந்திக்கு பாமக தலைமை நிர்வாக குழு உறுப்பினர் பதவி அளிக்கப்பட்ட நிலையில், செயல் தலைவராக விரைவில் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக அக்கட்சி வட்டாரங்களில் தகவல் பரவுகிறது. தனது தந்தையின் பக்கம் நான் எப்போதும் நிற்பேன் என ஸ்ரீகாந்தி கூறி விட்டதாகவும் மூத்த நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் அன்புமணிக்கான காலக்கெடு முடியும்வரை செய்தியாளர்கள் சந்திப்பை தவிர்க்க ராமதாஸ் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகின. அதை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த 19ம்தேதிக்கு பிறகு வழக்கமாக தைலாபுரத்தில் நடக்கும் வியாழன் செய்தியாளர்கள் சந்திப்பை ராமதாஸ் தவிர்த்தார். இதனிடையே நேற்றும் (28ம்தேதி) செய்தியாளர்கள் சந்திப்பை ராமதாஸ் ரத்து செய்துள்ளார். அன்புமணி குறித்த கேள்விகளை தவிர்க்கவே ராமதாஸ் இம்முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

இதனிடையே வருகிற 31ம்தேதி முதல்கட்டமாக பாமக செயல் தலைவர் பதவியிலிருந்து அன்புமணியை நீக்குவது தொடர்பான முக்கிய முடிவுகளை ராமதாஸ் அறிவிக்கலாம் என்ற பரபரப்பும் அக்கட்சி வட்டாரத்தில் எழுந்துள்ளது. ஆனால் இந்நடவடிக்கை எடுக்காதபடி குடும்பத்திலும், கட்சியிலும் ராமதாசுக்கு நெருக்கமானவர்கள் பேசி வருவதாக கூறப்படுகிறது.

இதுஒருபுறமிருக்க ராமதாஸ் தொடர்பான சில தனிப்பட்ட விமர்சனங்களை சமூக வலைதளத்தில் சிலர் தற்போது பரப்பி வருவதால் தைலாபுரம் வட்டாரம் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது. இதற்கும் விரைவில் பதிலடி கொடுக்க ராமதாஸ் தரப்பு தயாராகி வருவதால் பாமகவின் அடுத்தகட்ட நகர்வுகளை அக்கட்சியினர் மட்டுமின்றி தமிழக அரசியல் களமும் உன்னிப்பாக கவனித்து வருகிறது.

Advertisement

Related News