மருமகள், பேரனை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிய விவசாயி கைது
வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி, மந்தக்காடு பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி (55), விவசாயி. இவரது மனைவி லட்சுமி. இவர்கள் மகன் சுரேஷ், அவரது மனைவி அனிதா (26), மகன் சர்வமித்திரன் (ஒன்றரை வயது) ஆகியோருடன் வசித்துள்ளனர். கடந்த ஜூன் 2ம் தேதி மாமனார், மாமியார் இடையே ஏற்பட்ட தகராறை மருமகள் அனிதா தடுத்து மாமனாரை தட்டி கேட்டுள்ளார். அப்போது கீழே விழுந்ததால் ஆத்திரமடைந்த குப்புசாமி, நாட்டு துப்பாக்கியால் கைக்குழந்தையுடன் இருந்த அனிதா மீது சுட்டு விட்டு தப்பினார். இதில் காயமடைந்த இருவரும் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினர். இதுகுறித்து வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிந்து, குப்புசாமியை நேற்று கைது செய்தனர்.