நாங்க தர்காவை கேட்கல... தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை பேட்டி
சென்னை: தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை சென்னை தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் நேற்று அளித்த பேட்டி: திருப்பரங்குன்றத்தில் தீபத்தூண் என்பது மலையின் உச்சியில் கிடையாது. யாருமே தர்காவுக்கு பக்கத்திலே தீபத்தூணில் ஏற்ற வேண்டும் என்று சொல்லவில்லை. தர்காவில் இருந்து 50 மீட்டர் தூரத்தில் கொஞ்சம் கீழே இருக்கக்கூடிய தீபத்தூணில் ஏற்ற வேண்டும் என்பது தான் இன்றைக்கு போடப்பட்டிருக்கக்கூடிய ரிட் மனுவின் சாராம்சம். மலையின் உச்சியில் தர்கா இருக்கிறது. அதை யாரும் வேண்டும் என்று கேட்கவில்லை. அது வேறு. தீபத்தூண் என்பது இரண்டு மலையில் இருக்கக்கூடிய சிறிய மலையின் உச்சியில் தீபத்தூண் இருக்கிறது. அதை தான் இன்றைக்கு கேட்டு இருக்கிறார்கள். அதற்கு நீதிபதி அனுமதி கொடுத்து இருக்கிறார். 1.11.2025ல் கொடுக்கிறார். கார்த்திகை தீபம் 3ம் தேதி வருகிறது.
இரண்டாம் தேதி கோயில் இஓ பெயருக்கு ஒரு அப்பீல் போட்டு வைக்கிறார். கோயில் சொத்தை பாதுகாக்க வேண்டிய இஓ அப்பீல் பண்ண வேண்டிய அவசியம் என்ன?
மாநில அரசின் காவல்துறை அதிகாரிகள் தன்னுடைய கடமையை சரியாக செய்யவில்லை. அந்த கடமையை சரியாக செய்யாத காரணத்தால் தான் சிஎஸ்எப்பை அனுப்புறேன் என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கமாண்டன்ட் கூட போங்க. 10 பேர் தீபம் ஏற்ற அனுமதி கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார். இதில் எதுவும் தவறாக இல்லை. போடப்பட்ட 144 டிஸ்மிஸ் ஆகிறது. அதன் பிறகு நாங்கள் தீபத்தை ஏற்ற செல்லும் போது தடுத்து இருக்கிறார்கள். தடுத்தது மட்டுமல்ல, மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா, தொண்டர்களை சட்டவிரோதமாக கைது செய்து இருக்கிறார்கள். இது நீதிபதி கொடுத்திருக்கக்கூடிய தீர்ப்புக்கு எதிரானது. இவ்வாறு அவர் கூறினார்.