டிட்வா புயல் கனமழை முன்னெச்சரிக்கை சென்னை, திருவள்ளூரில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை: கலெக்டர்கள் அறிவிப்பு
சென்னை: டிட்வா புயல் கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது என்று கலெக்டர்கள் தெரிவித்துள்ளனர். வங்கக்கடலில் நிலவிய ஆழந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழுந்து காணப்படுகிறது. இதன் காரணமாக திருவள்ளூர், சென்னையில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் டிட்வா புயல் கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக சென்னை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். அதேபோன்று, திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று ஒருநள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று கலெக்டர் பிரதாப் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement