மோன்தா புயல் நகரும் வேகம் குறைந்தது: இன்றிரவு தீவிர புயலாக கரையை கடக்கும்: வானிலை மையம்
சென்னை: மோன்தா புயல் நகரும் வேகம் 12 கி.மீ.யில் இருந்து தற்போது 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; மசூலிப்பட்டினத்தில் இருந்து தெற்கு, தென்கிழக்கில் 100 கி.மீ. தொலைவில் மோன்தா புயல் மையம் கொண்டுள்ளது. காக்கிநாடாவுக்கு தெற்கு, தென்கிழக்கே 180 கி.மீ. தொலைவில் மோன்தா புயல் மையம் கொண்டுள்ளது. மோன்தா புயல் நகரும் வேகம் 12 கி.மீ.யில் இருந்து தற்போது 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. கலிங்கப்பட்டினம் பகுதியில் புயலால் மணிக்கு 34 கி.மீ. வேகத்தில் காற்று வீசுகிறது.
இன்று மாலை புயல் கரையை கடக்கும் நிலையில் விசாகப்பட்டினத்தில் 43 கி.மீ. வேகத்தில் காற்று வீசுகிறது. வடக்கு - வடமேற்கு திசையில் மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் மோன்தா புயல் நகர்ந்து வருகிறது. மத்திய மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள மோன்தா புயல் தீவிர புயலாக வலுவடைந்தது. வடக்கு வட மேற்கு திசையில் நகர்ந்து, மோன்தா புயல் தீவிர புயலாக வலுவடைந்தது. மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே காக்கிநாடா அருகே மாலை அல்லது இரவுக்குள் தீவிர புயலாக கரையை கடக்கும். புயல் கரை கடக்கும் நேரத்தில் 90 முதல் 100 கி.மீ. வேகத்தில் இடையிடையே 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்று தெரிவித்துள்ளது. மோன்தா புயல் காரணமாக ஆந்திராவில் 19 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.