தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டிட்வா புயல் வட தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும்: வானிலை ஆய்வு மைய தலைவர் அமுதா பேட்டி

சென்னை: டிட்வா புயல் வட தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய தலைவர் அமுதா பேட்டி அளித்துள்ளார். அதில்,

Advertisement

வங்கக்கடலில் உருவானது டிட்வா புயல்

தென்மேற்கு வங்கக்கடலில் டிட்வா புயல் வானிலை மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது.

வட தமிழ்நாட்டை நோக்கி நகரும் டிட்வா புயல்

டிட்வா புயல் வட தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும். புயலானது வட தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும். 30ம் தேதி அதிகாலை வடதமிழ்நாட்டின் கடலோர பகுதியில் டிட்வா புயல் நிலவும்.

15 கி.மீ. வேகத்தில் நகரும் டிட்வா புயல்

கடந்த 6 மணி நேரத்தில் 15 கி.மீ. வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது. அடுத்த 48 மணி நேரத்தில் வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதியை நோக்கி நகரும். புயல் நவம்பர் 30ம் தேதி அதிகாலையில் வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதியை வந்தடையும்.

சென்னைக்கு 700 கி.மீ. தூரத்தில் புயல் மையம்

சென்னைக்கு 700 கி.மீ. தூரத்தில் தெற்கு, தென்கிழக்கு திசையில் டிட்வா புயல் மையம் கொண்டுள்ளது. புதுச்சேரிக்கு 610 கி.மீ. தொலைவில் தெற்கு தென்கிழக்கு திசையில் புயல் மையம் கொண்டுள்ளது.

இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு. திருவாரூர், தஞ்சாவூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் நாளை அதி கனமழை பெய்ய வாய்ப்பு. மயிலாடுதுறை, அரியலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்பு. கடலூர், பெரம்பலூர், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு.

நாளை மறுநாள் 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, நாகை மாவட்டங்களுக்கு நாளை மறுநாள் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வடதமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் கன முதல் அதி கனமழை பெய்யக் கூடும்.

நவ.29, 30ல் சென்னையில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு

நவ.29, 30 ஆகிய தேதிகளில் சென்னையில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு. சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு. 12 செ.மீ. முதல் 20 செ.மீ. வரை மழை பெய்யும் என்பதால் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாளை காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

21 செமீ-க்கும் மேலாக மழைக்கு வாய்ப்பு என்பதால் 4 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

நாளை மறுநாள் 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சி, வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் நவ.29ல் மிக கனமழைக்கு வாய்ப்பு. கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் நாளை மறுநாள் மிக கனமழை பெய்ய வாய்ப்பு.

வங்கக்கடலில் 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்

வங்கக்கடலில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக் கூடும்.

50 கி.மீ. வேகத்தில் தரைக்காற்று வீசும்

தமிழ்நாட்டில் 50 கிலோ மீட்டர் வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும். தமிழ்நாட்டின் கடலோர பகுதிகள், புதுச்சேரி, காரைக்காலில் தரைக்காற்று 40 கி.மீ. முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக் கூடும்.

5 நாட்கள் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்

5 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும் என அறிவுறுத்தல்

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை 2% கூடுதல்

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 2% கூடுதலாக பெய்துள்ளது. பருவமழை காலத்தில் இயல்பாக 341.1 மி.மீ. மழை பெய்யும் நிலையில் தற்போதுவரை 348.6 மி.மீ. மழை பெய்துள்ளது.

புயல் நகரும் வேகம் குறைந்துள்ளது

இலங்கை கடல் பகுதியில் நிலவும் டிட்வா புயல் நகரும் வேகம் குறைந்துள்ளது.

Advertisement

Related News