புயலால் காங்கேசன் துறைமுகம் பாதிப்பு; நாகை-இலங்கை கப்பல் சேவை தற்காலிக ரத்து
Advertisement
நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் இடையே சுபம் நிறுவனம் கப்பல் சேவை வழங்கி வருகிறது. பருவநிலை மாற்றம் காரணமாக நவம்பர் மாதம் முழுவதும் நிறுத்தப்பட்டு இருந்த கப்பல் சேவை டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் கப்பல் சேவை தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் காலநிலை மாறுபாடு, டிட்வா புயல் தாக்கம் காரணமாக இலங்கை காங்கேசன் துறைமுகத்தில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளை சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. எனவே, மறுதேதி அறிவிக்கும் வரை கப்பல் சேவை ரத்து செய்யப்படுகிறது என கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Advertisement