மதமோதலை தூண்டும் வகையில் பேசிய வழக்கில் மதுரை ஆதீனத்திடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மடத்துக்குள் ஆதீனம் தவிர மற்றவர்கள் இருக்க வேண்டாம் என காவல்துறை அறிவுறுத்தல். சென்னை சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் பதம்குமாரி மதுரை ஆதீனத்திடம் விசாரணை. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மதுரை ஆதீனம் ஏற்கனவே முன்ஜாமின் பெற்றுள்ளார். போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என மதுரை ஆதீனத்துக்கு கோர்ட் நிபந்தனை விதித்தது.