நாம்பென்: கம்போடிய பிரதமர் ஹன் மன்னட் சைபர் குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதை தொடர்ந்து கம்போடிய அரசு 5 மாகாணங்களில் 3 நாட்கள் தொடர்ச்சியாக நடத்திய சோதனைகளில் 1,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாய்லாந்து எல்லையில் உள்ள பொய்பெட் என்ற இடம் சைபர் குற்ற மோசடிகள் மற்றும் சீட்டாட்ட கிளப்புகளின் முக்கிய இடமாக உள்ளது. இந்த இடத்தில் போலீசார் சோதனை நடத்தி 40 பெண்கள் உட்பட 270 இந்தோனேசியர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களையும் சேர்த்து 3 நாள் சோதனைகளில் மொத்தம் 1000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.