தனது காரை விடுவிக்க, சுங்கத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்ற நடிகர் துல்கர் சல்மானின் கோரிக்கையை ஏற்க கேரள உயர் நீதிமன்றம் மறுப்பு..!!
கேரளா: தனது காரை விடுவிக்க, சுங்கத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்ற நடிகர் துல்கர் சல்மானின் கோரிக்கையை ஏற்க கேரள உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. பூடானில் இருந்து சட்டவிரோதமாக கார்களை இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்து வந்தது அம்பலமானது. பூடான் ராணுவத்தினர் பயன்படுத்திய கார்களை குறைந்த விலைக்கு இறக்குமதி செய்து அதிக விலைக்கு இந்தியாவில் விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. ஆபரேஷன் நும்கூர் என்ற பெயரில் நடந்த சோதனையில் பல முன்னணி நடிகர்கள் சட்டவிரோதமாக கார்களை வாங்கியது தெரிய வந்தது. குறிப்பாக துல்கர் சல்மான் மற்றும் மற்றொரு கேரள நடிகர் பிரிதிவிராஜ் இல்லத்தில் சோதனை நடந்தது. நாடு முழுவதும் பல இடங்களில் நடந்த சோதனையில் 39 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதில் துல்கர் சல்மானின் 6 கார்களும் உள்ளடங்கியது. அதன் தொடர்ச்சியாக துல்கர் சல்மான் சார்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் முறையான ஆவணங்களின் அடிப்படையிலேயே வாகனங்களை வாங்கியதாக குறிப்பிட்டார். அதன் அடிப்படியில் பறிமுதல் செய்யப்பட்ட கார்களை சுங்கத்துறையினர் விடுவிக்க வேண்டும் என கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் விசாரணை ஆரம்பநிலையில் இருக்கும்போது காரை விடுவிக்க உத்தரவிட முடியாது. கொச்சி சுங்கத்துறை கூடுதல் ஆணையரிடம் முறையிடுமாறு துல்கர் சல்மானுக்கு கேரள உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. மேலும், துல்கர் சல்மானின் கோரிக்கையை பரிசீலித்து உரிய உத்தரவை ஒரு வாரத்தில் பிறப்பிக்குமாறு சுங்கத்துறைக்கு கேரள ஐகோர்ட் உத்தரவிட்டது.