ஐபோனுக்காக அடித்துக் கொள்ளும் வாடிக்கையாளர்கள்; iPhone 17 Series வாங்க அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருப்பு!
மும்பை: இந்தியாவில் ஐபோன் மீதான மோகம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளில், இந்த மோகம் ஒரு வெறி போக்காக மாறிவிட்டது. புதிய ஐபோன் அறிமுகப்படுத்தப்படும் போதெல்லாம், ஆப்பிள் கடைகளில் நீண்ட வரிசையில் வாடிக்கையாளர்கள் காத்திருக்கும் கலாச்சாரம் தொடங்கியுள்ளது.
தற்போது iPhone 17 Series வெளியீட்டிலும் இதேபோன்ற நிலை ஏற்பட்டுள்ளது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட iPhone 17 Series விற்பனை இந்தியாவில் இன்று தொடங்கிய நிலையில் மும்பையில் அமைந்துள்ள ஆப்பிள் விற்பனை மையம் முன்பு அதிகாலை முதலே வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். சிலர் கூட்டத்தில் முண்டியடித்ததால் அவர்களிடையே மோதல் ஏற்பட்டது.
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. ஐபோனுக்காக நீண்ட வரிசையில் காத்திருப்போரை சமூக ஊடகங்களில் சிலர் " இவர்களில் 80 சதவீதம் பேர் EMI வாடிக்கையாளர்கள்" என கிண்டல் செய்தும் வருகின்றனர். இந்த புதிய ஐபோனை வாங்கிய சிலர், தான் ஏதோ பெரிதாக சாதித்தது போல் போஸ் கொடுத்ததும், ஆர்ப்பரித்து வருகின்றனர்.