நடப்பு கல்வியாண்டு முதல் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து: மாநில கல்விக் கொள்கை குறித்து அன்பில் மகேஸ் விளக்கம்
சென்னை: நடப்பு கல்வியாண்டு முதல் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக மாநில கல்விக் கொள்கை குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார்.சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகம் கலையரங்கில் தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் குழுவினர் தயாரித்த மாநில கல்வி கொள்கைக்கான வரைவு அறிக்கை கடந்த 2024ம் ஆண்டும் ஜூலை 1ம் தேதி அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், மாணவர்களின் வளர்ச்சியே மாநிலத்தின் வளர்ச்சி என மாநில கல்விக் கொள்கையின் சிறப்பம்சங்கள் குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம் அளித்துள்ளார். அதில்,
10 ,12ம் வகுப்பு மட்டுமே பொதுத் தேர்வு
10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே பொதுத் தேர்வு நடக்கும் என அறிவிக்கப்பட்டது. 8ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி முறை தொடரும் என மாநில கல்விக் கொள்கையில் அறிவிக்கப்பட்டது. நடப்பு கல்வியாண்டு முதலே 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படும்.
இருமொழிக் கொள்கையே தொடரும்
தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே தொடரும் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
மாநில கல்விக் கொள்கை அமைச்சர் விளக்கம்
மாணவர்கள் மனப்பாடமாக அல்லாமல் சிந்தித்து தேர்வு எழுதும் வகையில் பாடத்திட்டம் வகுக்கப்படும்.
நடப்பாண்டு முதலே மாநில கல்விக் கொள்கை அமல்
மாநில கல்விக் கொள்கை இந்த ஆண்டு முதலே அமலுக்கு வருகிறது. மாணவர்களுக்கு அழுத்தம் தரக்கூடாது என்பதற்காக 11ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது.
மாணவர்களின் வளர்ச்சியே மாநிலத்தின் வளர்ச்சி
மாணவர்களின் வளர்ச்சியே மாநிலத்தின் வளர்ச்சி என மாநில கல்விக் கொள்கையின் சிறப்பம்சங்கள் குறித்துவிளக்கினார்.
மாநில கல்விக் கொள்கை - முக்கிய அம்சங்கள்
3, 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கூடாது. தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழி கொள்கையையே கடைபிடிக்க வேண்டும். நீட் தேர்வு இருக்கக்கூடாது; கல்வி மாநில பட்டியலில் வர வேண்டும். தொடக்க நிலை முதல் பல்கலைக்கழக நிலை வரை தமிழ் வழிக் கல்வியை வழங்குதல். பள்ளிக்கல்வியில் தமிழை முதல் மொழியாக நிலைநிறுத்துவது அவசியம் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் கொண்ட மாநில கல்விக் கொள்கை வெளியிடப்பட்டது.