கரன்சி நோட்டு அச்சகத்தில் மேனேஜர்கள்
1. டெபுடி மேனேஜர்:
i) பிரின்டிங் இன்ஜினியரிங் பேக்கிரவுண்ட்: 10 இடங்கள். தகுதி: பிரின்டிங் டெக்னாலஜி/ பிரின்டிங் இன்ஜினியரிங் பிரிவில் 60% மதிப்பெண்களுடன் பி.இ.,/பி.டெக்., தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ii) எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பேக்கிரவுண்ட்: 3 இடங்கள். தகுதி: எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்/ பவர் இன்ஜினியரிங் பிரிவில் 60% மதிப்பெண்களுடன் பி.இ.,/பி.டெக்., தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம்.
iii) கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் பேக்கிரவுண்ட்: 2 இடங்கள். தகுதி: கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் 60% மதிப்பெண்களுடன் பி.இ.,/பி.டெக்., தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம்.
iv) பொது நிர்வாகம் பேக்கிரவுண்ட்: 9 இடங்கள். தகுதி: மேனேஜ்மென்ட்/ வணிக மேலாண்மை/பெர்சனல் மேனேஜ்மென்ட்/ மெட்டீரியல்ஸ் மேனேஜ்மென்ட் பிரிவில் 60% மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டம் தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம்.
மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான வயது மற்றும் சம்பளம்: வயது: 31.08.2025 தேதியின்படி 31க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.88,638.
2. புராசசிங் அசிஸ்டென்ட் கிரேடு-1 (டிரெய்ன்டு): 64 இடங்கள். வயது: 18 லிருந்து 28க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: ரூ.24,500. தகுதி: பிரின்டிங்/மெக்கானிக்கல் இன்ஜினியரிங்/எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்/எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்/கெமிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் 55% மதிப்பெண்களுடன் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
கட்டணம்: பொது மற்றும் ஒபிசியினருக்கு ரூ.600/-. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/முன்னாள் ராணுவத்தினர்/பெண்களுக்கு கட்டணம் கிடையாது.
https://www.brbnmpl.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.08.2025.