குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர் உடலுக்கு கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அஞ்சலி
08:17 AM Jun 15, 2024 IST
Share
முட்டம்: குவைத் தீ விபத்தில் உயிரிழந்த காட்டுமன்னார்கோயில் அருகே முட்டம் கிராமத்தைச் சேர்ந்த சின்னத்துரை உடலுக்கு கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் தம்புராஜ் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம், சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மி ராணி ஆகியோர் மலர் வளையம் வைத்து குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்தனர்.