தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

“ரயில்வே கேட் திறந்துதான் இருந்தது!” : பள்ளி வாகன விபத்தில் உயிர் தப்பிய ஓட்டுநர், மாணவர் வாக்குமூலம்!

Advertisement

கடலூர் : கடலூர் அருகே செம்மங்குப்பம் பகுதியில் தனியார் பள்ளி வாகனம் மீது ரயில் மோதி 2 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 3 பேர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி ஒரு சிறுவர் உயிரிழந்துள்ளார். 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து, ரயில்வே துறை சார்பில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், “ரயில் மோதி பள்ளி வாகனம் விபத்துக்குள்ளானதற்கு ரயில்வே கேட் மூடப்படாமல் இருந்ததே காரணம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, தமிழ்நாடு காவல்துறை சார்பில் நடத்தப்பட்ட விசாரணையில், விபத்தில் சிக்கி உயிர் தப்பிய மாணவர் மற்றும் பள்ளி வாகன ஓட்டுநர் இருவரும், “ரயில்வே கேட் திறந்துதான் இருந்தது” என வாக்குமூலம் அளித்துள்ளனர்.

பள்ளி வேன் ஓட்டுநர் சங்கர் பேசுகையில், "நான் போகும்போதே ரயில்வே கேட் திறந்துதான் இருந்தது.கேட்டை மூட வேண்டாம் என நான் கேட் கீப்பரிடம் சொல்லவே இல்லை. ரயில் ஹாரன் சத்தம் கூட அடிக்கல. கேட் கீப்பரும் அந்த இடத்தில் இல்லை. ரயில்வே கேட் மூடி இருந்தால் நான் சென்றிருக்க மாட்டேன்."இவ்வாறு தெரிவித்தார். அதேபோல், காயங்களுடன் சிகிச்சைப் பெற்று வரும் மாணவர் விஸ்வேஷ்,"ரயில்வே கேட் திறந்தே இருந்தது; ரயில் வரும் சத்தம் கேட்கவே இல்லை. வழக்கமாக மூடப்பட்டிருக்கும் ரயில்வே கேட் இன்று திறந்தே இருந்தது. விபத்து நடந்த பிறகும் கேட் கீப்பர் வெளியே வரவே இல்லை"இவ்வாறு தெரிவித்தார்.

Advertisement

Related News