கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அரசு மருத்துவர் வீட்டில் 158 சவரன் நகை கொள்ளை: போலீசார் விசாரணை
இவரது வீடு கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள புதுபிள்ளையார்குப்பம் பகுதில் உள்ளது. இவரது வீட்டின் கீழ்தளத்தில் இவரது தந்தை இருந்து வருகிறார். ராஜா நேற்று பணிக்காக சென்று விட்டு, இன்று காலை வீடு திரும்பினார். வீட்டின் கதவு உடைக்கப்பட்ட இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த ராஜா வீட்டிற்குள் சென்று பார்த்த போது அவர் வைத்து இருந்த 158 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
ராஜாவின் மனனவி ஆர்த்தியும் மருத்துவராக செயல்பட்டு வருகிறார். ராஜா காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார் சம்பவ இடத்துக்கு கடலூர் மாவட்டம் காவலர் கண்காணிப்பு ஜெயக்குமார் வந்து விசாரணை மேற்கொண்டார். மேலும் கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. அரசு மருத்துவர் வீட்டில் 158 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தற்போது கடலூரில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.