சிஆர்பிஎப் உதவி எஸ்ஐ தற்கொலை
கோவை: கோவை துடியலூர் அருகே உள்ள கதிர்நாயக்கன் பாளையத்தில் சிஆர்பிஎப் பயிற்சி கல்லூரி உள்ளது. இங்கு மத்திய பிரதேசம் மெரினாபங்கா பகுதியிலுள்ள துர்கா தாஸ் கிங்கார்த்தியை சேர்ந்த ஸ்ரீ பகவான்சாமா (50) உதவி எஸ்ஐஆக பணிபுரிந்து வந்தார். அங்குள்ள குடியிருப்பில் தனியாக தங்கியிருந்தார். இவரது மனைவி, 2 குழந்தைகள் மத்திய பிரதேசத்தில் உள்ளனர். இந்நிலையில், கடந்த 7ம் தேதி இரவு வேலை முடிந்து அறைக்கு சென்றவர் அடுத்த நாள் பணிக்கு வரவில்லை. காவலர்கள் சென்று ஜன்னல் வழியாக பார்த்தபோது ஸ்ரீ பகவான்சாமா மின்விசிறி கொக்கியில் நைலான் கயிற்றில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து துடியலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Advertisement
Advertisement