அலை மோதும் கூட்டம் திருப்பதியில் 18 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
திருமலை: புரட்டாசி மாத 3ம் சனிக்கிழமையொட்டி திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் 18 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாளாகும். அதில் புரட்டாசி மாதத்தில் வரும் ஒவ்வொரு சனிக்கிழமையும் பிரசித்தி பெற்றவை. புரட்டாசி மாத 3ம் சனிக்கிழமையொட்டி நேற்று திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
Advertisement
ஏழுமலையானை தரிசனம் செய்ய அதிக அளவில் பக்தர்கள் வந்தனர். வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 அறைகள் நிரம்பியதால் வெளியே சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோகர்பன் அணை அருகே அக்டோபஸ் கமாண்டோ அலுவலகம் வரை அமைக்கப்பட்டுள்ள வரிசையில் பக்தர்கள் 18 மணி நேரம் வரிசையில் காத்திருந்தனர்.
Advertisement