தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிய நவ. 15ம் தேதி கடைசி நாள்: வேளாண்மை இணை இயக்குனர் தகவல்

Advertisement

திருவள்ளூர்: பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்ய இன்னும் 4 நாட்களே உள்ளதால் நிர்ணயிக்கப்பட்ட காலக் கெடுவுக்குள் காப்பீடு செய்யலாம் என வேளாண்மை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார். வேளாண்மை இணை இயக்குனர் கா.முருகன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் நடப்பாணடில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் அக்ரிகல்ச்சர் இன்சூரனஸ் கம்பெனி ஆப் இந்தியா லிட் என்ற காப்பீட்டு நிறுவனத்தால் செயல்படுத்தப்படுகிறது.

தற்போது சம்பா நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.518 காப்பீட்டு கட்டணமாக விவசாயிகள் செலுத்தினால் போதுமானது. காப்பீடு செய்வதற்கு நவம்பர் 15ம் தேதி கடைசி நாளாகும். காப்பீடு செய்வதற்கான காலவரையறை முடிவடைய இன்னும் 4 நாட்களே உள்ளதால் விவசாயிகள் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை காப்பீடு செய்வதற்கு நிர்ணயிக்கப்பட்ட கடைசி நாளுக்கு முன்னதாகவே காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.

எனவே சம்பா பருவத்தில் சாகுபடி மேற்கொள்ளூம் விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலோ, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலோ அல்லது பொது சேவை மையங்களிலோ இ - சேவை மையங்கள் நேரிடையாக நிர்ணயிக்கப்பட்ட காலக் கெடுவுக்குள் காப்பீடு செய்யலாம். விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும்போது முன் மொழிவு விண்ணப்பம், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் நடப்பு பசலிக்கான அடங்கல், கணினி சிட்டா,

வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து காப்பீட்டு கட்டணத் தொகையை செலுத்திய பின் அதற்கான ரசீதையும் பொது சேவை மையங்களில் இ - சேவை மையங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்றுக் கொள்ளலாம். பதிவு செய்த விவரங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என விவசாயிகள் உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு தங்களது பகுதியில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். இவ்வாறு கூறியுள்ளார்.

Advertisement