குற்றச் செயலில் ஈடுபடுவோர் திருந்துவதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை நீதிபதி கருத்து
Advertisement
மதுரை: குற்றச் செயலில் ஈடுபடுவோர் திருந்துவதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும் என ஐகோர்ட் கிளை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். 19 வழக்கு நிலுவையில் உள்ளபோதும் குற்றச் செயலில் ஈடுபடமாட்டேன் என்ற உறுதிமொழி பத்திரத்தை ஏற்றது. எதிர்காலத்தில் குற்றச் செயல்களில் ஈடுபட மாட்டேன் என உறுதிமொழி பத்திரம் தந்த நபருக்கு ஜாமீன் தரப்பட்டது. அனுமதியின்றி மது விற்ற புகாரில் கைதான தஞ்சை மகேஸ்வரனுக்கு ஐகோர்ட் கிளை ஜாமீன் வழங்கியது.
Advertisement