டிஜிபிக்கு அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா கடிதம்..!!
12:56 PM May 10, 2024 IST
சென்னை: ஜாமீனில் வெளிவருபவர்கள் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட்டால் ஜாமீனை ரத்துசெய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபிக்கு அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா கடிதம் எழுதியுள்ளார். குற்றவாளிகளுக்கு ஜாமின் வழங்கும்போது நீதிமன்றங்கள் விதித்த நிபந்தனைகளை மீறுபவர்கள் ஜாமினையும் ரத்து செய்ய வேண்டும் என கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.