திருச்சி: திருச்சியை சேர்ந்த காதல் ஜோடியான (17வயது சிறுமியும், 19வயது இளைஞரும்) கடந்த 2023 அக்.4ம் தேதி பஸ்சில் திருச்சி மாவட்டம் முக்கொம்பு சுற்றுலா தலத்துக்கு சென்றனர். அப்போது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஜீயபுரம் போலீசில் பயிற்சி எஸ்ஐயாக பணியாற்றிய சசிக்குமார்(28), தேசிய நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தில் பணியாற்றிய சங்கர்ராஜபாண்டி(32), நவல்பட்டு காவல்நிலைய காவலர் பிரசாத்(26), ஜீயபுரம் காவல்நிலைய காவலர் சித்தார்த் (30) ஆகிய 4 பேர் போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டனர்.
தொடர்ந்து, 4 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.இதில் எஸ்ஐ சசிகுமார் மற்றும் காவலர்கள் பிரசாத், சித்தார்த் ஆகியோரின் மீது குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, 3 பேரையும் பணி நீக்கம் செய்து, திருச்சி சரக டிஐஜி வருண்குமார் நேற்று உத்தரவிட்டுள்ளார்.