வியாபாரியை காரில் கடத்தி 1.5 கிலோ நகை கொள்ளை: மர்மக்கும்பலுக்கு போலீசார் வலை
காரைக்குடி: காரைக்குடியில் நள்ளிரவு தங்கநகை வியாபாரியை காரில் கடத்திச்சென்று 1.5 கிலோ நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மக்கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையை சேர்ந்தவர் விஜயராஜா (40). தங்கநகை வியாபாரி. இவர், தொழில் நிமித்தமாக நேற்று நள்ளிரவு 12 மணியளவில் சிவகங்கை மாவட்டம், காரைக்குடிக்கு பஸ்சில் வந்தார்....
பாமக நிறுவனர் ராமதாஸின் தைலாபுரம் இல்லத்தில் சிசிடிவி ஹேக் செய்யப்பட்டதாக காவல்துறையில் புகார்
விழுப்புரம்: பாமக நிறுவனர் ராமதாஸின் தைலாபுரம் இல்லத்தில் சிசிடிவி ஹேக் செய்யப்பட்டதாக காவல்துறையில் புகாரளிக்கப்பட்டுள்ளது. ராமதாஸை யாரெல்லாம் சந்திக்கின்றனர் என சிசிடிவியை ஹேக் செய்து கண்காணித்ததாக விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் டி.எஸ்.பி. உமாதேவியிடம் ராமதாஸ் சார்பில் புகார்மனு அளிக்கப்பட்டது. ஹேக் செய்யப்பட்ட வைஃபை மோடத்தை டி.எஸ்.பியிடம் ராமதாஸின் நேர்முக உதவியாளர் ஒப்படைத்தார். ...
இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வழக்கறிஞர் கைது
சென்னை: ஐடி பெண் ஊழியர் ஒருவர் தனது நண்பர்களோடு பெசன்ட் நகர் கடற்கரைக்கு இரவில் சென்றபோது பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இளம்பெண் அளித்த புகாரில் வேளச்சேரியை சேர்ந்த வழக்கறிஞர் சாய் கிரிதரனை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். ...
சிறுவனுக்கு பாலியல் ெதால்லை போக்சோவில் போதகர் கைது
நாகர்கோவில்: குமரி மாவட்டம் தக்கலை அடுத்த மூலச்சல் பகுதியை சேர்ந்தவர் வர்கீஸ் (55). மத போதகர். கிறிஸ்தவ சபை நடத்தி வந்தார். இந்த சபையில் வேதாகம வகுப்புகளும் விடுமுறை நாட்களில் நடத்துவார். சிறுவர், சிறுமிகள் பலர் இந்த வேதாகம வகுப்புக்கு வந்து செல்வார்கள். இவ்வாறு வந்த 17 வயது சிறுவனுக்கு போதகர் வர்கீஸ் பாலியல்...
ஆண் நண்பருடன் பழகியதை கண்டித்ததால் கணவனை கொன்ற மனைவி: கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் கைது
திருவள்ளூர்: பட்டப் பகலில் ரியல் எஸ்டேட் இடைத்தரகர் சிவகுமார் கொலையில் அவரது மனைவி விஜயகுமாரி, ஆண் நண்பர் சுரேஷ், ரவுடி லால் பிரகாஷ் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவேற்காட்டில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு ரியல் எஸ்டேட் இடைத்தரகர் சிவகுமார் கொலையில் அவரது மனைவி விஜயகுமாரி, ஆண் நண்பர் சுரேஷ், ரவுடி லால்...
ஆண் நண்பருடன் பழகுவதை கண்டித்ததால் கூலிப்படையை ஏவி கணவனை கொன்ற மனைவி கைது!!
சென்னை : திருவேற்காட்டில் கூலிப்படையை ஏவி கணவனை கொன்ற மனைவி விஜயகுமாரி கைது செய்யப்பட்டார். பட்டப் பகலில் ரியல் எஸ்டேட் இடைத்தரகர் சிவகுமார் கொலையில் அவரது மனைவி விஜயகுமாரி, ஆண் நண்பர் சுரேஷ், ரவுடி லால் பிரகாஷ் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஆண் நண்பர் சுரேஷுடன் பழகுவதை கணவர் கண்டித்ததால் கூலிப்படை ஏவி...
டெல்லியில் நடைபயிற்சி சென்ற மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் எம்.பி. சுதாவிடம் நகை பறிப்பு
டெல்லி: மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் எம்.பி. சுதா கடந்த 2024-ம் ஆண்டு முதல் மக்களவையில் உறுப்பினராக உள்ளார். தற்போது நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடந்துவருவதால் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கியுள்ளார். டெல்லியில் தங்கும்போது எல்லாம் அருகில் உள்ள பகுதியில் காலையில் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கமான ஒன்றாகும். இன்று காலை அவர் திமுக எம்.பி. சல்மாவுடன்...
டெல்லியில் இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டபோது, மயிலாடுதுறை எம்.பி., சுதாவிடம் நகை பறிப்பு
டெல்லி: டெல்லியில் இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டபோது, மயிலாடுதுறை எம்.பி., சுதாவிடம் மர்ம நபர் நகையை பறிந்து தப்பியோடியுள்ளார். ஹெல்மெட் அணிந்தபடி வந்த அடையாளம் தெரியாத நபர் 4 சவரன் நகையை பறித்துச் சென்றதாக புகாரளிக்கப்பட்டுள்ளது. ...
ரூ.18.25 கோடி மோசடி கரூரை சேர்ந்தவர் கைது: சிபிஐ அதிரடி
கரூர்: நிதி நிறுவனம் நடத்தி ரூ.18.25 கோடி மோசடி செய்து கரூரில் பதுங்கி இருந்த ஒருவரை சிபிஐ கைது செய்தது. கோவை பீளமேடு பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார்(49). இவர், கோவை மற்றும் பெங்களூரில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 5 பேரை பங்குதாரர்களாக கொண்டு 2010ல் பைனான்ஸ் நிறுவனத்தை துவங்கினார். நிறுவனத்தில் ரூ.10,000 முதலீடு செய்பவர்களுக்கு மாதம்...