பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம்: பள்ளி செயலர் மீது நடவடிக்கை
10:21 AM Aug 07, 2025 IST
அம்பாசமுத்திரம்: அரசு உதவி பெறும் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் பள்ளி செயலாளர், தலைமை ஆசிரியர், எழுத்தர் மீது முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார். பள்ளி செயலாளர் கந்தசாமி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார், தலைமை ஆசிரியர் அழகிய நம்பி, எழுத்தர் பூபதி மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.