மதுரையில் ரூ.3.74 கோடி ஹவாலா பணம் பறிமுதல்
Advertisement
ரகசிய தகவலின் பேரில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வாகன நிறுத்தத்தில் இருந்த காரில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது காரில் வைத்து ஹவாலா பணத்தை கைமாற்றும் வேலையில் ஈடுபட்ட பாபுராவ் உள்ளிட்ட 5 பேரை போலீசார் மடக்கிப்பிடித்தனர். பின்னர் ரூ.3.74 கோடி ஹவாலா பணம், காரை பறிமுதல் செய்த போலீசார், 5 பேரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். போலீசார் அளித்த தகவலின் பேரில், வருமான வரித்துறை(ஐடி) அதிகாரிகள் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement