கள்ளக்காதலுக்கு இடையூறு; 4 வயது மகளை கொன்ற தாய்: கோவையில் ஒரு குன்றத்தூர் அபிராமி
இந்நிலையில், நேற்று மதியம் அபர்ணாஸ்ரீ வீட்டில் இருந்த போது திடீரென வாந்தி எடுத்து மயங்கி விட்டதாக தமிழரசி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு டாக்டர்கள் அபர்ணாயை பரிசோதனை செய்து, வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சிங்காநல்லூர் போலீசார் விசாரித்தனர். அப்போது தமிழரசியின் குடும்பத்தினர் குழந்தையின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், கழுத்தில் காயம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து போலீசார் தமிழரசியை போலீஸ் நிலையம் அழைத்து சென்று தீவிரமாக விசாரணை நடத்தினர்.அப்போது, அவர் கள்ளக்காதலன் வசந்த் குழந்தையை பிரிந்து வந்தால் தன்னுடன் குடும்பம் நடத்துவதாக கூறியதால் மகளை கொன்று நாடகமாடியதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் தமிழரசி மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். கடந்த 2018ம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரில் அபிராமி என்ற பெண் தனது இரண்டு குழந்தைகளையும் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கொலை செய்தார். அவருக்கும், அவரது கள்ளக்காதலனுக்கும் நேற்று முன்தினம் நீதிமன்றம் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பான தீர்ப்பை வழங்கியது குறிப்பிடத்தக்கது.