புதுகையில் சகோதரர்கள் வெட்டிக்கொலை: 7 பேர் கைது
இந்நிலையில் அறந்தாங்கி அடுத்த நாகுடி காவல் நிலையத்தில் முத்துபேட்டையை சேர்ந்த காளிதாஸ் (35), யஸ்வந்த் (30), ராமநாதபுரம் முனீஸ்வரன் (31), அறந்தாங்கி முத்துக்குமார்(40), பஞ்சாத்தி ஐயப்பன்(22), சமத்துவபுரம் சத்திய சேகரன்(45), சதீஷ் குமார்(28) ஆகிய 7 பேர் நேற்று சரண் அடைந்தனர். மணல் விற்பனை, பைக் விற்பனை விவகாரத்தில் முன்விரோதத்தில் கொலை செய்ததாக கூறியுள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து 7 பேரையும் கைது செய்தனர்.