தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சவாரி அழைத்து செல்வதுபோல் நடித்து பீகார் தொழிலாளர்களை கடத்தி பணம் பறித்த ஆட்டோ டிரைவர்: தப்பிய கூட்டாளிகளுக்கு வலை

பெரம்பூர்: பீகார் மாநிலத்தை சேர்ந்த அர்ஜூன் (33), சூலூர்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். விடுப்பில் சொந்த ஊருக்கு சென்ற இவர், தனது நிறுவனத்தில் வேலை செய்ய 11 பேரை அழைத்துக் கொண்டு கடந்த 28ம் தேதி இரவு, பீகார் மாநிலத்தில் இருந்து விரைவு ரயிலில் சென்னை புறப்பட்டார்.
Advertisement

நேற்று காலை 10 மணிக்கு பெரம்பூர் ரயில் நிலையம் வந்தடைந்த அர்ஜூன் உள்ள 12 பேரும், அங்கிருந்து ஆட்டோவில் சென்ட்ரல் ரயில் நிலையம் செல்ல முயன்றனர். அப்போது, 3 ஆட்டோ டிரைவர்கள் இவர்களை சவாரி அழைத்து செல்வது போல் நடித்து, ஜமாலயா பகுதியில் உள்ள செங்கை சிவம் மேம்பாலத்தில் ஆட்டோக்களை நிறுத்தி, கத்தி முனையில் அர்ஜூன் வைத்திருந்த 7500 ரூபாயை பறித்துள்ளனர்.

அப்போது, ஓட்டேரி உதவி ஆய்வாளர் சண்முகம் அவ்வழியாக ரோந்து சென்றதால், அவரை பார்த்து வடமாநில தொழிலாளர்கள் உதவி கேட்டு கூச்சலிட்டனர். இதனால், 2 ஆட்டோ டிரைவர்கள் அங்கிருந்து தப்பினர். ஒரு ஆட்டோ டிரைவரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில், பெரம்பூர் ராஜிவ்காந்தி நகரை சேர்ந்த மதன்குமார் (45) என்பதும், இவருடன் வந்தவர்கள் துரை மற்றும் கார்த்திக் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து மதன்குமாரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். தப்பிய துரை மற்றும் கார்த்திக் ஆகிய இருவரை தேடி வருகின்றனர்.

Advertisement