மனிதகுலத்துக்கு எதிரான குற்றம் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகனுக்கு எதிராக கைது வாரண்ட்: வங்கதேச நீதிமன்றம் உத்தரவு
டாக்கா: வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக கடந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஷேக் ஹசீனா பிரதமராக பதவி வகித்தபோது அரசுக்கு எதிராக மாணவர் போராட்டம் வெடித்தது. போராட்டங்களில் ஏற்பட்ட வன்முறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, ஷேக் ஹசீனா தற்போது இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். மாணவர் போராட்டங்களில் ஈடுபட்டவர்களை சுட்டு கொல்ல ஷேக் ஹசீனா உத்தரவிட்டதாக ஆடியோ வௌியானது. இதுதொடர்பான வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு டந்த மாதம் 17ம் தேதி மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் மனித குலத்துக்கு எதிரான குற்றத்தில் ஈடுபட்டதாக ஷேக் ஹசீனாவின் மகன் மகன் சஜிப் வாஜேத் ஜாய்க்கு எதிராக கைது வாரண்ட். பிறப்பித்து வங்கதேச சிறப்பு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. தற்போது சஜிப் வாஜேத் ஜாய், அமெரிக்காவில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.