விபத்துக்குள்ளான விமானம் 2023 ஜூனில் பரிசோதிக்கப்பட்டது: ஏர் இந்தியா விளக்கம்
விபத்து குறித்து ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் கேம்பல் வில்சன் கூறுகையில், “ஏர் இந்தியா போயிங் 787-8 டீரிம்லைனர் விமானம் நன்கு பராமரிக்கப்பட்டது. கடந்த 2023 ஜூன் மாதம் பெரியளவில் பரிசோதனை செய்யப்பட்டது. அடுத்ததாக நடப்பாண்டு டிசம்பரில் பரிசோதிக்க திட்டமிடப்பட்டிருந்தது. அதன் வலப்பக்க இயந்திரம் கடந்த மார்ச் மாதம் மாற்றி அமைக்கப்பட்டது. இடப்பக்க இயந்திரம் ஏப்ரல் மாதம் நன்றாக சோதனை செய்யப்பட்டது. இயந்திரங்கள் இரண்டும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டன. விபத்துக்கு முன் அதில் எந்த பிரச்னைகளும் இல்லை. 33 போயிங் 787-8 விமானங்களில் 26 விமானங்களில் இப்போது ஆய்வு முடிக்கப்பட்டுள்ளது” என்றார்.