மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதி..!!
சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். அண்மைக் காலமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வைரஸ் காய்ச்சல் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தமிழக சுகாதாரத் துறை கடந்த சில வாரங்களுக்கு முன்பு எச்சரித்தது.
Advertisement
இதை முன்னிட்டு, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும்
குறைந்தபட்ச சமூக இடைவெளி கடைபிடித்தல், மக்கள் கூட்டம் நிறைந்த இடங்களில் முககவசம் அணிதல் உள்ளிட்டவற்றை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியது. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Advertisement