குற்றாலத்தில் இன்று குற்றாலநாத சுவாமி கோவில் ஐப்பசி விசு திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
தென்காசி: குற்றாலம் குற்றாலநாத சுவாமி திருக்கோவிலில் ஐப்பசி விசு திருவிழா இன்று காலையில் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். குற்றாலம் சித்திரசபை கும்பாபிஷேக திருப்பணிக்காக பாலாலயம் செய்யப்பட்டுள்ளதால் சுவாமி புறப்பாடு வெளியே செல்லாததால் இந்த ஆண்டு தேரோட்டம் நடைபெறாது. குற்றாலம் குற்றாலநாதசுவாமி திருக்கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி விசு திருவிழா வெகு விமர்சையாக நடத்துவது வழக்கம்.
இந்த ஆண்டு திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடியை ஜெயமணி சுந்தரம்பட்டர் தலைமையில் பிச்சுமணி என்ற கண்ணன் பட்டர், கணேசன் பட்டர், மகேஷ்பட்டர் ஏற்றி வைத்தனர். இதில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஆறுமுகம், அறங்காவலர் குழு தலைவர் சக்தி முருகேசன், உறுப்பினர்கள் வீரபாண்டியன்,
ஸ்ரீதர், ராமலட்சுமி பெருமாள், சுந்தர்ராஜ், திருவிளக்கு பூஜை கமிட்டி தலைவர் இலஞ்சி அன்னையாபாண்டியன், வட்டார காங்கிரஸ் தலைவர் குற்றாலம் பெருமாள், அருண், சொக்கம்பட்டி ஜமீன்தார் பெரிய அனஞ்சி தேவர், சின்ன அனஞ்சி தேவர் வம்சாவழி ஊர் பொதுமக்கள் சார்பில் வெள்ளத்துரை, மாரிச்சாமி, சுப்பையா பாண்டியன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் செல்வகுமார், முத்து பிரகாஷ், ராமகிருஷ்ணன், சரவணன், கார்த்திக், தங்கப்பாண்டி,
காந்தி, செந்தூர்பாண்டி, சேகர், முத்து, பகவதி பாண்டியன், சண்முகையா, மணி, செந்தூர் பாண்டியன், எம்.வெள்ளத்துரை, திமுக இளைஞரணி அருண், வர்த்தக சங்கம் காவையா, வேல்ராஜ், அம்பலவாணன், குருநாதன், கல்யாணசுந்தரம், இந்து ஆலய பாதுகாப்பு சிவ வடிவேலன் மற்றும் திருக்கோவில் பணியாளர் அழகு உட்பட பலர் பங்கேற்றனர். சிவ பூதகன வாத்தியங்களும் இசக்கப்பட்டன.
விழாவில் தினமும் காலை மாலை வேளைகளில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள், இரவில் கோவில் உள்பிரகாரத்தில் கேடயத்தில் வீதி உலா நடக்கிறது. விழாவில் 12ம் தேதி கேடயத்தில் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு, 13ம் தேதி காலையில் 5.40 மணிக்கு மேல் 6 மணிக்குள் விநாயகர், முருகன், குற்றாலநாதர், குழல்வாய்மொழி அம்பாள் திருக்கோயில் கேடயத்தில் எழுந்தருளல் நடக்கிறது.
15ம் தேதி காலை 9.30 மணிக்கும், இரவு 7 மணிக்கும் திருக்கோவில் மணிமண்டபத்தில் வைத்து நடராசமூர்த்திக்கு தாண்டவ தீபாரதனை நடக்கிறது. 16ம் தேதி காலை 10.30 மணிக்கு திருக்கோவில் மணிமண்டபத்தில் வைத்து நடராஜ மூர்த்திக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடக்கிறது.
18ம் தேதி காலையில் 10.40 மணிக்கு மேல் விசு தீர்த்தவாரி, 11 மணிக்கு மேல் கேடயத்தில் காட்சி நடக்கிறது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் ஆறுமுகம், அறங்காவலர் குழு தலைவர் சக்தி முருகேசன் உறுப்பினர்கள் ஸ்ரீதர், ராமலட்சுமி, சுந்தர்ராஜ், வீரபாண்டியன் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.