மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலித்ததற்காக, ரூ.5000 இழப்பீடாக வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை : மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலித்ததற்காக, ரூ.5000 இழப்பீடாக வழங்க மாதாவரம் டாஸ்மாக் கடை விற்பனையாளருக்கு சென்னை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட விலையை விட ரூ.10 கூடுதலாக தன்னிடம் வாங்கியதாக, ரூ.1 லட்சம் இழப்பீடு கோரி தேவராஜன் என்பவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். புகாரை விசாரித்த நுகர்வோர் நீதிமன்ற உறுப்பினர்கள், முறையற்ற வணிகத்தில் டாஸ்மாக் கடை விற்பனையாளர் ஈடுபட்டுள்ளதாகக் கூறி 2 மாதத்தில் ரூ.5000 இழப்பீடாக வழங்க உத்தரவிடப்பட்டது.
Advertisement
Advertisement