அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தயார் மறைவுக்கு இபிஎஸ் இரங்கல்
டெல்லி: நீதிமன்றத்தை அரசியலுக்காக பாஜக பயன்படுத்தக்கூடாது என்று உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மக்களவைத் தோ்தல் பிரசாரத்தின்போது மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால், இடஒதுக்கீடு முறை ரத்து செய்யப்படும் என்று தெலங்கானா முதல்வரும், காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்தவருமான ரேவந்த் ரெட்டி தெரிவித்திருந்தார். இதன்மூலம், பாஜகவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி, அவதூறான, ஆத்திரமூட்டும் கருத்துகளை அவா் தெரிவித்ததாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.இதுகுறித்து தெலங்கானா பாஜக அளித்த புகாா் மனுவை ஹைதராபாத் விசாரணை நீதிமன்றம் விசாரித்த நிலையில், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு எதிராக பாஜக தொடர்ந்த அவதூறு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
பாஜக 400 தொகுதியில் வென்றால் இடஒதுக்கீட்டை அழித்து விடுவார்கள் என ரேவந்த் ரெட்டி பேசியிருந்தார். ரேவந்த் ரெட்டிக்கு எதிராக தெலுங்கானா மாநில பாஜக பொதுச்செயலாளர் வெங்கேடஸ்வரலு வழக்கு தொடர்ந்தார். வழக்கை தெலுங்கானா ஐகோர்ட் தள்ளுபடி செய்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். பாஜக நிர்வாகி மேல்முறையீட்டு மனுவை எடுத்த எடுப்பிலேயே உச்சநீதிமன்றம் அதிரடி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. வழக்கை விசாரிக்க வேண்டுமென பாஜக நிர்வாகி வலியுறுத்தியதற்கு தலைமை நீதிபதி கண்டனம் தெரிவித்தார். இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தெலங்கானா பாஜக மனு தாக்கல் செய்தது. இந்த மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய், நீதிபதிகள் கே.வினோத் சந்திரன், அதுல் எஸ்.சாந்துா்கா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக வரும் 8-ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளதாக தெரிவித்திருந்தார். இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மூன்று இன்று விசாரணைக்கு வந்தது.
அரசியலில் இருப்பவர்கள் விமர்சனத்தை தாங்கவேண்டும்"
நீதிமன்றத்தை அரசியலுக்கு பயன்படுத்தக்கூடாது என ஏற்கெனவே பலமுறை கண்டித்துள்ளோம் என தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கண்டனம் தெரிவித்தார். அரசியலில் உள்ளவர்களுக்கு விமர்சனத்தை தாங்கும் மனம் இருக்க வேண்டும் எனவும் நீதிபதி அறிவுறுத்தினார்.