நாட்டுத் துப்பாக்கி குறி தவறியதால் இளைஞர் பலி: கல்வராயன் மலை அருகே பரபரப்பு
கள்ளக்குறிச்சி: கல்வராயன் மலை அருகே கோழியை நாட்டுத் துப்பாக்கியால் சுட முயன்றபோது குறி தவறியதால் இளைஞர் உயிரிழந்தார். மேல் மதூர் கிராமத்தில் மருமகனுக்கு கோழி அடித்து குழம்பு வைப்பதற்காக அண்ணாமலை என்பவர் கோழியை சுட்டுள்ளார். கோழிக்கு வைத்த குறி தவறி பக்கத்து வீட்டில் இருந்த பிரகாஷ் என்பவரின் தலை மீது குண்டு பாய்ந்தது. நாட்டுத் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் இளைஞர் பிரகாஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இளைஞர் பிரகாஷ் உயிரிழப்பு தொடர்பாக கரியாலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement