தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாட்டு விதைகளுக்கு மட்டுமே அனுமதி!

படித்தது பி.இ. செய்வது இயற்கை விவசாயம். நாட்டு ரக விதைகளை சேகரிப்பதும், அவற்றைப் பரவலாக்குவதுமே முழுநேர வேலை. இப்படி, படிப்பிற்கும் வேலைக்கும் சம்பந்தமில்லாமல், விவசாயத்தின் மீது ஏற்பட்ட ஆர்வத்தால் இயற்கை வெள்ளாமைக்கு வந்தவர் ஹானஸ்ட் ராஜ். கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூருக்கு அருகேயுள்ள நாகம்பட்டியைச் சேர்ந்த இவர், அந்தப் பகுதியில் பலராலும் அறியப்பட்ட இயற்கை விவசாயியாக பரிணமித்திருக்கிறார். தென்னை, மா, தக்காளி போன்ற சில பயிர்கள் மட்டுமே விளையும். அதுவும் ரசாயன பயன்பாடாக இருக்கும். இப்படியொரு கிராமத்தில் முதன்முதலாக இயற்கை விவசாயத்தை கையில் எடுத்தவர் இவர். அதுமட்டுமல்ல, இவரது குடும்பத்தில் தாத்தா மட்டும்தான் விவசாயி. அப்பா, 20 வருடங்களுக்கு முன்பு சிறிய அளவில் மலர் சாகுபடி செய்து பார்த்து நாளடைவில் அதை கைவிட்டவர். இந்தச் சூழலில் பிறந்து வளர்ந்த ஹானஸ்ட் ராஜ் இயற்கை விவசாயம் பக்கம் எப்படித் திரும்பினார் என்பதை தெரிந்துகொள்ள, கிருஷ்ணகிரியில் இருந்து 27 கி.மீ பயணம் செய்து அவரது கிராமத்தை அடைந்தோம். `` எல்லோரையும் போல நல்லா படிக்கனும். நல்ல வேலைக்குப் போகணும் என்பதுதான் என்னோட ஆசையும். அதனால்தான், இஞ்சினியரிங் படிப்பை தேர்வு செய்தேன். படிப்பின் முடிவில் கேம்பஸ் இன்டர்வ்யூ-ல் பணிக்குத் தேர்வானேன். பின், கோவை, ஒசூர் போன்ற ஊர்களில் தனியார் கம்பெனிகளில் வேலை பார்த்தேன். படித்ததற்கான வேலைதான் என்றாலும் எனக்கு என்னமோ நான் செய்துவந்த வேலை பிடிக்கவில்லை. இரண்டு வருடம் பிடிக்காத வேலையையே செய்து வந்த நான் ஒரு கட்டத்தில் அந்த வேலையை விட்டு வெளியேறினேன். என்ன செய்வதென்றே தெரியாமல் சுற்றித்திரிந்த நாட்கள் அவை. அப்போதுதான், இந்தியா முழுவதும் பயணம் செய்யலாமென முடிவெடுத்து பயணம் சென்றேன். பின் ஊருக்குத் திரும்பிய பின்னும் கூட நமக்குப் பிடித்த வேலை எதுவோ அதைத்தான் செய்ய வேண்டும் என்று முடிவோடு இருந்தேன். அந்த நேரத்தில்தான் எங்கள் பகுதியில் விதைத் திருவிழா கண்காட்சி நடைபெற்றது.

Advertisement

அங்கு பார்வையாளனாகச் சென்றேன். அங்கிருந்த ஒவ்வொரு விதையும் பாரம்பரிய நாட்டு விதைகள் என்பதும், இந்த விதைகள் அனைத்தும் தற்போது அழியும் தருவாயில் உள்ளன என்பதும் தெரியவந்தது. அதுபோக, இன்னும் பல நாட்டு ரக விதைகள் தற்போது கிடைப்பதே இல்லை என்ற தகவலையும் அங்கு சென்ற பின்பு எனக்கு தெரிந்தது. நிகழ்வுக்கும் வந்தவர்கள், நாம் தற்போது சாப்பிடும் உணவுப்பொருட்கள் எப்படி உருவாகின்றன? அவற்றை சாப்பிட்டால் உடல் நலம் எப்படி பாதிக்கும்? என்பதை விளக்கி பாரம்பரிய விதைகள் மற்றும் இயற்கை விவசாயத்தின் அவசியம் குறித்து விளக்கம் தந்தார்கள். இவை அனைத்தையும் ஒரே நேரத்தில் தெரிந்துகொண்ட நான், நாமும் பாரம்பரிய நாட்டு ரக விதைகளை சேகரிக்க வேண்டும் என நினைத்தேன். அதுமட்டுமல்ல, அந்த விதைகள் அனைத்தையுமே பயிரிட்டு, விதைகளைப் பெருக்கி மற்றவர்களுக்கும் கொடுக்க வேண்டும், இந்த விதைகளின் அழிவை தடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அப்படித்தான் நான் இயற்கை விவசாயத்திற்குள் வந்தேன்’’ என்ற ஹான்ஸ்ட் ராஜ் மேலும் தொடர்ந்தார்.

``நான் விதைகளை சேகரிக்கத் தொடங்கிய சமயத்தில் ஏற்கனவே பலர் விதைகளை சேகரித்து வருகிறார்கள் என்பது தெரிந்தது. அவர்களோடும் பயணித்தேன். இந்த விதைகளை சேகரிக்க தமிழ்நாடு மட்டுமல்லாது பிற மாநிலங்களுக்கும் பயணம் செய்தேன். ஒரிசா, நேபாளம், பீகார், உ.பி என இந்தியா முழுவதும் விதைகள் சேகரிக்க 60 ஆயிரம் கி.மீ பயணம் செய்தேன். தமிழ்நாட்டில் உள்ள நாட்டு விதைகளை மட்டும் பயிரிடாமல் இந்தியா முழுவதும் கிடைக்கும் நாட்டு விதைகளை சேகரித்து, நமது ஊரில் பரவலாக்க வேண்டும் என இந்த பயணத்தை மேற்கொண்டேன். ஊருக்கு திரும்பியவுடன் அவற்றை இயற்கை முறையில் பயிரிட்டு சாகுபடி செய்ய ஆரம்பித்தேன். இயற்கை முறையில் விவசாயம் செய்வது, நஞ்சு கலக்காத உணவுப் பொருட்களை உட்கொள்வது, பாரம்பரிய ரக விதைகளை சேகரிப்பது, அந்த விதைகளை தமிழ்நாடு முழுவதும் பரவலாக்குவது என்பதுதான் என்னுடைய தற்போதைய வேலை. ஐந்து வருடங்களாக விதை சேகரித்து வந்தாலும், கடந்த மூன்று ஆண்டுகளாகத்தான் இயற்கை விவசாயம் செய்து வருகிறேன்.

எங்களுக்குச் சொந்தமான இரண்டு ஏக்கரில் எனது தாத்தா வளர்த்த 77 தென்னைகள் இருக்கின்றன. அந்த தென்னைகளுக்கு இடையிலான நிலத்தை நான் எனது இயற்கை விவசாயத்திற்கு பயன்படுத்திக் கொண்டேன். ஒவ்வொரு தென்னைக்கும் நடுவே ஊடுபயிராக எல்லா நாட்டு ரக காய்கறிகளையும் பயிரிடத் தொடங்கினேன். வீட்டுத் தேவைக்காகவும் விதைக்காகவும் மட்டுமே இந்த சாகுபடியை தொடங்கிய நான், அனைத்துப் பயிர்களையுமே அதிகப்படுத்தத் தொடங்கினேன். அதற்கு, கரிசலுடன் செம்மண் கலப்பு கொண்ட எனது நிலத்தில், எருவையும் மண்புழு உரத்தையும் கலந்து இட்டு சாகுபடிக்கு உகந்த வளமான நிலமாக மாற்றினேன்.பின் தக்காளி, வெண்டை, அவரை, காராமணி, கத்தரி, மிளகாய் போன்ற பயிர்களையும் புடலை, பாகல், பீர்க்கன், சுரைக்காய் போன்ற பந்தல் காய்கறிகளையும் பயிரிட்டேன். அதைப்போல, அனைத்து வகையான கீரைகளையும் சாகுபடி செய்தேன். இவை அனைத்தையும் இப்போது தொடர்கிறேன். இந்த பயிர்களின் பல்வேறு ரகங்களையும் தேடித்தேடி விதைக்கிறேன். கத்தரியில் 6 வகை, வெண்டையில் 4 வகை, மிளகாயில் 4 வகை என ஒவ்வொரு பயிரையும் பல ரகங்களில் சாகுபடி செய்து வருகிறேன்.

தற்போது எனது சேகரிப்பில் நெல் விதைகளைத் தவிர்த்து காய்கறிகள், சிறுதானியங்கள் என 150க்கும் அதிகமான ரகங்கள் உள்ளன. இந்த ரகங்களை விதைத்து அறுவடை செய்வதையும், மக்களுக்கு கொண்டு செல்வதையும் முழுமூச்சாக செயல்படுத்துகிறேன். எங்களது உணவுத்தேவைக்கான விளைபொருட்கள் அனைத்தையும் இந்த நிலத்திலேயே விளைவிக்கிறோம். எங்கள் தேவை போக மற்ற காய்கறிகளை எங்கள் பகுதியில் உள்ளவர்களுக்கு விற்பனை செய்கிறேன். விதைகளை சேகரித்து உற்பத்தி செய்வதையும் பரவலாக்குவதையும் நோக்கமாக கொண்டிருப்பதால், விவசாயப் பொருட்களை விற்பனை செய்வதில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. இருந்தபோதும், அன்றன்றைக்கு விளையும் காய்கறிகள், கீரையில் இருந்து குறிப்பிட்டளவு வருமானம் பார்க்கிறேன். ஒரு நாளைக்கு ஐந்து கிலோ காய்கறிகள் கிடைத்தாலே எனது வாழ்வுக்கு போதுமானது. அதை விற்பனை செய்கிற வருமானமே போதுமானது’’ என நிறைவாக பேசி வழியனுப்பினார்.

தொடர்புக்கு:

ஹானஸ்ட் ராஜ்: 98941 04714.

கீரை சாகுபடியை தொடர்ந்து செய்துவரும் ஹானஸ்ட் ராஜ், கீரை இலை, கீரைப்பூ, கீரை விதை போன்றவற்றை விற்பனை செய்தது போக, மீதமாகும் கீரையை பொடியாக மதிப்புக்கூட்டி அவர் தேவைக்கு பயன்படுத்தி வருகிறார்.

நாட்டு ரக விதைகள் பெரும்பாலும் 2 அல்லது 3 ஆண்டுகள்தான் நல்ல முளைப்புத்திறனுடன் இருக்கும். அதன்பின் பயிரிட்டால், அந்த விதைகளில் முளைப்புத்திறன் இருக்காது என்பதால் ஹானஸ்ட் ராஜ் தன்னிடம் உள்ள அனைத்து விதைகளையும் நிலத்தில் பயிரிட்டு, ஆண்டுதோறும் ஃப்ரெஷ்ஷான விதைகளை உற்பத்தி செய்து வருகிறார்.

 

Advertisement

Related News