அளவிலா அன்பு பொழிந்த உள்ளங்களின் எண்ணிலடங்கா நினைவுகளுடன் தாயகம் திரும்புகிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
Advertisement
சென்னை: தமிழ்நாட்டுக்கு, முதலீடுகளை ஈர்க்க ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்ற முதல்வர் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு தமிழ்நாடு திரும்புகிறேர். ஜெர்மனியில் தமிழர்கள் வரவேற்புடன் தொடங்கிய பயணம் லண்டனில் தமிழர்கள் வாழ்த்தி வழியனுப்ப நிறைவுறுகிறது. ஆகஸ்ட் 30-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனிக்கு சென்றார்.
இது தொடர்பாக முதல்வரின் சமுக வலைதள பதிவில்:
ஜெர்மனியில் தமிழர்கள் அளித்த உற்சாக வரவேற்புடன் தொடங்கிய #TNRising பயணம், இலண்டன் மாநகரில், அவர்கள் வாழ்த்தி வழியனுப்ப நிறைவுறுகிறது. அளவில்லா அன்பு பொழிந்த உள்ளங்களின் எண்ணிலடங்கா நினைவுகளுடன் தாயகம் திரும்புகிறேன். இத்தனை நாளும் தங்கள் சகோதரனாய் என்னை கவனித்துக்கொண்ட தமிழ் புலம்பெயர் சமூகத்திற்கு என் அன்பை நன்றியாய் நவில்கிறேன் என கூறியுள்ளார்.
Advertisement